"எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" - சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா உருக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா தனது 2வது திருமண ஆண்டு விழாவை கேக் வெட்டிக் கொண்டாடினார்...

ஏற்கனவே விவாகரத்தான நடிகர் பாலா 2021ல் மருத்துவரான எலிசபெத் உதயன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்... பாலா தமிழில் காதல் கிசு கிசு, தம்பி, மஞ்சள் வெயில், அண்ணாத்த, வீரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 6ம் தேதி கடும் இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையிலேயே தனது 2வது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அவர், ஓரிரு நாட்களில் தனக்கு முக்கியமான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும், அதில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதென்றாலும் தப்பிக்கவும் வாய்ப்புண்டு என்பதால் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com