திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் கோலாகலம்.. பக்தியுடன் கண்டுகளித்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் 3 முறை பூ பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீச, அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடைபெற்றது. தாயார்களை சமாதானப்படுத்திய பிறகு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், இணைந்து கோயிலுக்கு வந்தடைந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
