பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' இப்பொது இந்தியில் உருவாகிறது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

x
  • இன்றைய இளைஞர்களின் 3வது காதாக ஹெட்போன்ஸும் , 11வது விரலாக செல்போனும் மாறிவிட்டது. இந்த இரண்டுமே காதலர்களுக்கு மிக முக்கியமான விஷயங்களாகவும் உள்ளன.
  • ஆனால், அதே செல்போன் காதலர்களுக்கு எதிரியாக மாற அடித்தளமாக இருப்பது ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட நம்பிக்கை. இதை அடிநாதமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் லவ் டுடே
  • படத்தின் பட்ஜெட்டே 5 கோடி தான் என சொல்லப்படுகிறது. ஆனால் 2022ல் வெளியான படங்களிலேயே , அதிக லாபகரமான படம் என்ற பட்டியலில் முன்னணியில் உள்ளது லவ் டுடே.
  • தமிழில் ரிலீஸாகி ஓடி முடிக்கும் நேரத்தில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் சக்கை போடு போட்டது. ஒரு தெலுங்கு ரசிகர் இயக்குநர் பிரதீப்பை தூக்கி வைத்து பாராட்டிய வீடியோவும் வைரல் ஆனது.
  • OTT-யில் ரிலீஸ் ஆன பிறகும் கூட திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ள இந்த படம் தற்போது இந்தியில் உருவாகப்போகிறது .
  • தமிழில் இந்த படத்தை தயாரித்த AGS நிறுவனத்துடன் PHANTOM நிறுவனம் இணைந்து இந்தியில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பதை பற்றி இனி அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்