இவர் ஆட.. உலகமே ஆடும்... நம்மூர் மைக்கேல் ஜாக்சன் (பிரபு தேவா)- லைப்-அ கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுவோம்

x
  • தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும்னு சும்மாவா செல்லி வச்சாங்க...! தந்தையை மிஞ்சிய தனயன் தான் இந்த ராஜாதி ராஜனான பிரபுதேவா!
  • 90களில் மேற்கத்திய இசை மீது இளசுகள் கவனம் திரும்ப காரணம் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் என்றால்... மேற்கத்திய நடனத்தின் மீதான அவர்களின் ஈர்ப்பு அதிகரிக்க காரணமானவர்... இந்த 'நடனப்புயல்'
  • என்ன ரேட்டு...வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு நோ ப்ராப்ளம்' )
  • இப்படி வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு பெயர் போன பிரபுதேவா... பரதநாட்டியமும்... கற்று தேர்ந்தவர்.
  • டான்ஸ் மாஸ்டர் முகூர் சுந்தருக்கு பிறந்த மூன்று முத்துகளுள் ஒருவர் தான்... இந்த பிரபுதேவா... கடந்த 1973 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூருவில் பிறந்த இவர்... தனது பள்ளி பருவத்திலேயே படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
  • மெளனம் ராகம் படத்தில் வரும் பனி விழும் இரவு பாடலில் புல்லாங்குழல் வாசிக்கும் சிறுவனாக வந்தவர்... தந்தையின் சூப்பர் ஹிட் பாடலான ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில் குரூப் டான்சரானார்.
  • அதன் பிறகு படங்களில் அவ்வபோது வெறும் ஒற்றை பாடலுக்கு தலைகாட்ட தொடங்கினார்... ஆனால் அப்படி அவர் தலைகாட்டிய பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தன.
  • இப்படி வெறும் டான்சராக மட்டும் தலை காட்டி வந்தவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார், இயக்குனர் ஷங்கர்... அவ்வளவு தான் 'காதலன்'ஆக பெண் ரசிகைகளின் இதயங்களை கவர தொடங்கிவிட்டார், பிரபுதேவா.
  • ஹீரோவாக இவர் நடித்த முதல் படமே நான்கு தேசிய விருதுகளை அள்ளியது... ஆனால் பிரபுதேவாவிற்கு
  • சிறந்த கொரியோகிராஃபருக்கான தேசிய விருதை வாங்கி கொடுத்த பாடல்... இன்றும் இளைஞர்களின் காதல் கீதமாக ஒலிக்கும் மின்சார கனவு படத்தில் இடம்பிடித்த 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் தான்.
  • 90களில் பிரபுதேவாவின் ஒவ்வொரு பாடலும் இளைஞர்களுக்கு 'பூஸ்ட்'.. 'எனர்ஜி'.. 'வைப்' என்றே தான் சொல்ல வேண்டும்.
  • குணச்சித்திர நடிப்பால் உணர்ச்சிகளை கொட்டி தீர்ப்பதிலும்... காமெடியில் புகுந்து விளையாடுவதிலும்... கில்லாடி... இந்த பிரபுதேவா.
  • இப்படி நடனம்... நடிப்பு என கலக்கியவர்... இயக்குனர் அவதாரமும் எடுத்து... பல ரீமேக் படங்களை இயக்கி... ஹிட் மேல் ஹிட் கொடுத்தார்.
  • தெலுங்கு... இந்தி... தமிழ் என தனது இயக்குனர் முத்திரையை பதித்த பிரபுதேவா... பல தோல்வி படங்களை சந்தித்திருந்தாலும்..... ஒருபோதும் நடனத்தால் ரசிகர்களை கவர தவறியதில்லை.
  • இப்படி 'கிங் ஆப் டான்ஸ்'ஆக வலம் வரும் பிரபுதேவா தான்... இன்றும் பல இளம் கொரியோகிராஃபர்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஹப்பி பர்த்டே பிரபுதேவா!

Next Story

மேலும் செய்திகள்