பிரபாகரனின் 68-ஆவது பிறந்த நாள் விழா- நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டம்

x

சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை, நள்ளிரவில் மாட்டு கறி விருந்துடன் கொண்டாடினர்.

பிரபாகரனின் 68-ஆவது பிறந்த நாளை, பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், விசிக துணைத் தலைவர் வன்னியரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இட்லி, மாட்டுக் கறி விருந்துடன் நடைபெற்ற இந்த விழாவில், பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். விழாவில் பேசிய வன்னியரசு, பிரபாகரனின் தமிழ் ஈழக்கொள்கை இளைஞர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது என்றும், இதை இந்திய அரசு புரிந்து கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்