"மின்துறையை தனியார் மயமாக்க கூடாது" - டெல்லியில் திரண்ட மின்துறை ஊழியர்கள்

x

மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கவே, மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக கூறி, டெல்லியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மின்சார சட்டத்திருத்த மசோதாவால், மின்கட்டணம் உயரும் என்றும், சாமானியர்களுக்கு மின்சாரம் கிடைக்காது எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை பேரணியும் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்