கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பி - மாடுகளுக்கு நேர்ந்த சோகம்

x

கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பி - மாடுகளுக்கு நேர்ந்த சோகம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பட்டை மேடு பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, லட்சுமி ஆகியோர் கறவை மாடுகளை மேய்த்துள்ளனர். அப்போது காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்தன. இதனைக்கண்டு பதறி அருகில் சென்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராஜேஸ்வரி, நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்