உயிரை பறித்த வறுமை..! - படிப்பை தொடர பணம் இல்லாததால் விரக்தி... மாணவர் எடுத்த விபரீத முடிவு...

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரியில் சேர பணம் இல்லாத விரக்தியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், மாணவனின் தாயார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால், அவரை கவனிப்பதற்காக சொந்த ஊரிற்கு சென்றுள்ளார். இதனால், மாணவரின் படிப்பு பாதியில் நின்றதாகவும், வேறொரு கல்லூரியில் சேருவதற்கு போதிய பணம் இல்லாததாலும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விஷ்ணு அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவரின் உடல் முன்பு குடும்பத்தினர் கதறி அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்