பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை.. இலவச உணவுக்காக பறிபோன 11 உயிர்கள்

x

பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டில் உணவுக்குக் கூட வழியின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் போது மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏராளமானோர் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி மயக்கமுற்றதுடன், 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்