கொட்டிய மழை...பாக். பிரதமரை வரவேற்க குடையுடன் வந்த பெண் அதிகாரி - குடையை மட்டும் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டிய பாக். பிரதமர்

கொட்டிய மழை...பாக். பிரதமரை வரவேற்க குடையுடன் வந்த பெண் அதிகாரி - குடையை மட்டும் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டிய பாக். பிரதமர்
Published on

பிரான்ஸ் நாட்டில் கொட்டும் மழையில் பெண் அதிகாரியிடம் இருந்து குடையை வாங்கிக் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தனியே நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கலந்து கொண்டார். அங்கு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்திறங்கிய பாகிஸ்தான் பிரதமரை குடையுடன் வரவேற்றார் பெண் அதிகாரி ஒருவர். ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ, பெண் அதிகாரியிடம் இருந்து குடையை மட்டும் வாங்கிக் கொண்டு தனியே நடையைக் கட்டினார். அவர் தனக்குத் தானே குடைப்பிடித்துக் கொண்டது நல்ல விஷயம் என்ற போதிலும், பாகிஸ்தான் பிரதமர் நனையக் கூடாது என்பதற்காக குடை கொண்டு வந்த பெண் அதிகாரி மழையில் நனைந்து கொண்டு சென்ற வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com