உருளை கிழங்கை இப்படியும் சமைக்கலாமா..? அரைமணி நேரத்தில் அசத்தல் ரெசிபி... தரமான தாய்லாந்து சமையல்...

x
  • அதாவது நம்ம ஊருல தேங்காய்... பருப்புலாம் போட்டு ஸ்வீட் கொழுக்கட்டை பண்ற மாதிரி.... இவங்க ஊர்ல காய்கறிகள், சிக்கன், உருளைகிழங்குலாம் போட்டு Croquette Potato dumpling பண்றாங்க...
  • ஹ்ம்ம்ம்... விசுவல்லா பாக்கவே கண்ணுக்கு விருந்து வைக்குது... சாப்ட்டு பாத்தா எப்படி இருக்கும்... சரி வாங்க டைம் வேஸ்ட் பண்ணாம டக்குனு சமைக்க ஆரம்பிக்கலாம்...
  • Croquette Potato சமிக்க தேவையான பொருட்கள்...

உருளை கிழங்கு,

கேரட்,

வெங்காயம்,

சிக்கன் சாசேஜ்,

உப்பு,

மயானஸ்,

கறிமசாலா தூள்,

மிளகு தூள்,

dumpling wrappers,

எண்ணெய்...

  • அவ்ளோ தான்... இனி சமைக்க ஆரம்பிக்கலாம்....
  • முதல்ல ஒரு பெரிய சைஸ் வெங்காயம்... கேரட் இது ரெண்டுத்தையும் எடுத்து பொடி பொடி பொடியா நறுக்கிக்கனும்... அடுத்து ஒரு சிக்கன் சாசேஜ் துண்டை எடுத்து அதையும் பொடிசு பொடிசா நறுக்கிக்கனும்...
  • அடுத்து 300 கிராம் அளவுக்கு உருளை கிழங்க... பொடிசா நறுக்கி வேக வச்சு... மாவு பதத்துக்கு மசிக்கனும்...
  • இப்போ என்ன பண்றோம் பெரிய பான் பாத்திரத்துல... மூனு ஸ்பூன் அளவுல எண்ணெய்ய ஊத்தி... பொடி பொடியா நறுக்கி வச்ச... வெங்காயம், கேரட், சிக்கன் சாசேஜ் இந்த மூணுத்தையும் போட்டு... அதுல ஒரு ஸ்பூன் உப்பை போட்டு நல்லா ஆவி பறக்க வதக்கி விடனும்...
  • வதக்கிவிட்ட இந்த மூணையும்.... சூட்டோட சூட்டா... மசிச்சு வச்ச கிழங்குல மேல போட்டு.... அது கூடவே ஒரு ஸ்பூன் மயானஸ்... அரை ஸ்பூன் கறிமசாலா... கொஞ்சோன்டு மிளகுதூள்னு... மசாலா ஐட்டங்களை தூவி விட்டு நல்லா... பினைஞ்சுக்கனும்...
  • அடுத்து பினைஞ்சு வச்ச மாவ... உள்ளங்கை அளவுக்கு எடுத்து... உருண்டை பிடிச்சு... dumpling wrappers நடுவுல வைக்கனும்...
  • dumpling wrappers ஆ... அப்டினா என்னனு ஒரு டவுட்டு வரும்... அதாவது நம்ம மைதா மாவுல தேய்ச்சு பன்றதை... நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ரெடி மேடா கடைல கிடைக்கிற இதுக்கு பேரு தான் dumpling wrappers....
  • சரி... சமையலுக்கு வருவோம்... dumpling wrappers க்கு நடுவுல மாவு
  • உருண்டைய வச்சதுக்கு அப்புறம்.... dumpling wrappers ஓரத்துல எண்ணெய்ய தடவி அதை சேலை மடிக்குற மாதிரி மடிச்சு... மாவு தெரியாத அளவுக்கு அழகா முடிச்சு போடனும்... இது மாதிரி உங்க தேவையான அளவுக்கு செஞ்சு... அதே எண்ணெய் ஊத்துன பாத்திரத்துல... வரிசையா அடுக்கி... பொரிச்சு வேக வச்சு எடுத்தா... அசத்தலான Croquette Potato dumpling ரெடி...
  • சரி... ஆளுக்கு ஒரு கிண்ணத்தை எடுத்துட்டு வாங்க... சட்னி தொட்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்....

Next Story

மேலும் செய்திகள்