ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

x

வரும் 10 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1, தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று, வரும் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென இந்த தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்