"பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம்...அப்டேட் தான கேட்டோம்" -மதுரையை கலக்கும் ரசிகர்களின் போஸ்டர்கள்

x

நடிகர் சூர்யாவின் 42வது படத்திற்கான அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் வித்தியாசமான வாக்கியங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்... சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்... இப்படத்தின் மோஷன் போஸ்டர் தவிர இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சிலர் அப்டேட் கேட்டு நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். அதில் we want surya 42 update என்ற ஹேஷ்டேக்குடன், "பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட் தான கேட்டோம்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பொதுமக்களைக் கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்