"விதிகளை மீறி மேம்பாலத்திக் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்கள் அகற்றப்படும்" - கோவை காவல் துறை

x

விதிகளை மீறி மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள திமுக சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் வரை கலைய மாட்டோம் எனக் கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், 3 நாளில் திமுக சுவரொட்டிகள் அகற்றப்படும் என்றும், கைதான பாஜகவினர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் வருவாய் கோட்டாட்சியரும் போலீசாரும் உறுதியளித்தனர். இதையடுத்து, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பாஜகவினர் கலைந்து சென்றனர். எனினும், 3 நாளில் திமுக சுவரொட்டிகள் அகற்றப்படா விட்டால், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், 16-ஆம் தேதியன்று போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்