முதுகலை ஆசிரியர் பணியிட கட் ஆஃப் உயர்வு?
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவடைந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்வை விட, கட்-ஆப் மதிப்பெண் கணிசமாக உயர்ந்துள்ளதாக தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2019ல் வணிகவியல் பாடத்தில் 85 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை கிடைத்ததாகவும், ஆனால் இந்த முறை 85 மதிப்பெண் எடுத்தும் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெறாததை சுட்டிக்காட்டி தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்களில் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story