இளம் பெண்களை மிரட்டி ஆபாச படம் ... ஜவுளிக்கடை வைத்து பாலியல் தொழில்... போலீசாரையே அதிர வைத்த பெண்

x

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நாகசாயி. இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் தன் கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் சிலரிடம் நட்பாக பேசி நெருங்கிய பழக்கத்தை உருவாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடைக்கு புத்தாடை வாங்க வந்த 20 வயது இளம் பெண்ணிடமும் அதே போல் நெருங்கி பழகியுள்ளார்.

இதில், அந்த பெண்ணை ஒரு நாள் வீட்டிற்கு அழைத்து சென்ற போது குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார் நாகசாயி.

இதையடுத்து, தன் ஆண் நண்பர் உதவியுடன் அந்த பென்ணை ஆபாசமாக செல்போனின் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த இளம் பெண்ணை வைத்து சமூக வலைதளம் மூலம் சிலரிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிக்கிய ஒரு இளைஞனை வீடியோ பதிவு செய்து 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர் விஜயவாடா போலீசில் புகாரளிக்க அதிர்ச்சியடைந்த போலீசார் நாகசாயி மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார், இதே போல் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்