பிரபல இளம் யூடியூபர் சாலை விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

22 வயது இளைஞர்... சினிமா வசனங்களை, தனது பாணியில் தனித்துவமாகவும், நகைச்சுவையாகவும் பேசி யூடியூப்பில் பதிவிட்டு வந்தது... பிரபல நகைச்சுவை நடிகருடன் வெப் சீரீஸில் நடித்தது... மாநில அரசின் ஆவணப்படங்களில் நடித்து மாநில முதல்வருடன் நெருக்கமாக இருந்தது... என இளம் வயதிலே புகழின் உச்சியில் இருந்த அவர், யூடியூப்பில் வீடியோ அப்லோட் செய்வதற்காக கண்டென்ட் தேடி சென்ற போது லாரியில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த விவாசாயி கன்ஷியாம் என்பவரின் மகன் தேவ்ராஜ். 22 வயதான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல இந்தி திரைப்பட வசனத்தை தனது பாணியில் நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பெரும் வைரலானது...இதை அப்படியே பின் தொடர்ந்து தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வந்த தேவ்ராஜ்ஜை யூடியூப்பில் 4 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர... பிரபல யூடியூபரானார்...

நகைச்சுவை நடிகருக்கான தோற்றமும், பேச்சும்... பிரபல நகைச்சுவை நடிகர் புவன் பாமுடன் திண்டோரா என்ற வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.... இதனுடன், சத்தீஸ்கர் அரசாங்கத்தின் ஆவணப் படங்களிலும் தொடர்ந்து தேவ்ராஜ் நடித்து வந்த நிலையில், இதனால் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட, கடந்த ஆண்டு முதல்வர் பூபேஷ் பாகேலுடன் தேவ்ராஜ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது... இந்நிலையில், யூடியூப் வீடியோவுக்காக கண்டென்ட் தேடி தனது நண்பருடன் ராய்ப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தேவ்ராஜ் மீது, பின்னால் வந்த லாரி மோதியுள்ளது... இதில், தூக்கி வீசப்பட்ட தேவ்ராஜ் படுகாயமடைந்த நிலையில், சிறுகாயத்துடன் தப்பிய அவரது நண்பர் ஆம்புலன்ஸ் மூலம் தேவ்ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்...ஆனால், தேவ்ராஜ் வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...தேவ்ராஜுடன் எடுத்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த சத்தீஸ்கர் மாநில முதல்வர், தேவ்ராஜின் மறைவு செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்றும், இளம் வயதிலே அதீத திறைமை கொண்ட ஒருவரை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்...இறப்பதற்கு முந்தையை நாள் தேவ்ராஜ் இன்ஸ்டாகிராமில் வீடியோவில் பதிவிட்டுள்ள நிலையில், அதை பகிர்ந்து வரும் தேவ்ராஜின் ரசிகர்கள், அவரை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்