கழிவறையில் இறந்து கிடந்த பிரபல டிவி நடிகர் ஆதித்யா சிங் - அதிர்ச்சியில் திரையுலகம்

x

நடிகர் மட்டுமின்றி, பிரபல மாடலாகவும், காஸ்டிங் ஒருங்கிணைப்பாளராகவும் பலரது கவனத்தை ஈர்த்து வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் அந்தேரியில் உள்ள வீட்டின் குளியலறையில் மயங்கி கிடப்பதை பார்த்த பணிப்பெண், காவலர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் நடிகர் இறந்ததாக தகவல்கள் பரவி வரும் நிலையில், போலீஸ் தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்