பிரபல நடிகையின் ஒற்றை டிரெண்டிங் பதிவு!

x

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 29 ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை நடிகை சுஷ்மிதா சென், தனது இன்ஸ்ட்டாவில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இதே நாளில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சுஷ்மிதா சென், முதன்முறையாக வெற்றி பெற்று மகுடம் சூடினார். தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், அழகிய புன்னகையுடன் கூடிய இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் பிரபுத்தா தாஸ்குப்தாவை நினைவுகூர்ந்துள்ளார். தாய்நாட்டிற்காக, தான் வென்ற இந்த பட்டம், தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்