தலையில் தீயிட்டு பொங்கல் - கடலூரில் வினோத திருவிழா | Cuddalore

x

தலையில் தீயிட்டு பொங்கல் பொங்கும் விநோத திருவிழா கடலூரில் நடைபெற்றது... விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது... அப்போது சாமி ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் சக்கர வடிவில் துணியை மண்ணெண்ணெயில் நனைத்து அதை தலையில் வைத்து எரியவிட்டு, அதன்மேல் பாத்திரம் வைத்து பொங்கலிட்டு சாமிக்கு படைக்கப்பட்டது. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தப் பொங்கல் பிரசாதமாகத் தரப்பட்டது... இதை சாப்பிடுபவர்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


Next Story

மேலும் செய்திகள்