"தமிழகத்தில் மிகவும் பிடித்த உணவு பொங்கல்" தனியார் நிகச்சியில் ஆளுநர் கலகலப்பு பேச்சு...

தமிழகத்தில் மிகவும் பிடித்த உணவு பொங்கல் தனியார் நிகச்சியில் ஆளுநர் கலகலப்பு பேச்சு...
x

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் நிர்வாக இயக்குனர் லட்சுமி ராஜாராம், நிறுவனத்தின் தலைவர் கிஷோர் குமார் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா காலத்தில் விடுதி மாணவர்களுக்கு பாடம் கற்​பித்தற்காக 100 வயது மூதாட்டிக்கு விருது வழங்கி கவுரவித்தார் ஆளுநர்.

மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், தனக்கு மிகவும் பிடித்த உணவு நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் என்றார்.Next Story

மேலும் செய்திகள்