சொந்த வேலையாக சென்ற மூதாட்டி... வீடு திரும்பிய போது நடந்த சோகம்

x

சென்னை திருவான்மியூரில் மாநகர பேருந்து மோதியதில், மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பள்ளிக்கரணையை சேர்ந்த தெய்வநாயகி என்பவர் திருவான்மியூருக்கு சொந்த வேலையாக சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் வீடு திரும்ப திருவான்மியூரில், பேருந்து ஏற சென்ற போது, தெய்வநாயகி மீது தாம்பரம் செல்லக்கூடிய மாநகர பேருந்து மோதியுள்ளது.

இந்த விபத்தில், தெய்வநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், ஓட்டுநர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்