'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்

x

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்


சிவகங்கை மாவட்டம் சலுகைபுரத்தில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். சலுகைபுரம் கிராமத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் 9 தலைமுறையாக பெண்கள் வெள்ளை சேலையை அணிந்து பச்சை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் ஏராளமான பெண்கள் காலி பானைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வாசலில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்