பசியுடன் இருந்த குழந்தைகள்...தங்களுக்கு கொடுத்த உணவை ஊட்டி பசி ஆற்றிய பெண் போலீஸ்

x

பசியுடன் இருந்த குழந்தைகள்...தங்களுக்கு கொடுத்த உணவை ஊட்டி பசி ஆற்றிய பெண் போலீஸ்


அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை காண வந்த குழந்தைகள், சிறுவர்களுக்கு, பெண் போலீசார் தங்களது உணவை கொடுத்து பசி ஆற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, ஜல்லிக்கட்டை காண வந்து பசியுடன் இருந்த குழந்தைகளை பார்த்தை பெண் போலீசார், தங்களுக்கு கொடுத்த உணவை ஊட்டி விட்டு பசி ஆற்றினர். அந்த வழியாக சென்ற சிறுவர்களையும் அழைத்து சாப்பாடு கொடுத்த‌து பாராட்டுகளை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்