நடனமாடிக் கொண்டே போக்குவரத்து சீர் செய்யும் காவலர் குமார்.. காவலரின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம்..

x

நடனமாடிக் கொண்டே போக்குவரத்து சீர் செய்யும் காவலர் குமார்.. காவலரின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம்..


சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் பதக்கம் பெறவுள்ளார் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் குமார்... சாலைப் போக்குவரத்தை காவலர் குமார் சீர் செய்யும் ஸ்டைலே தனி தான்... நடனமாடிக் கொண்டே இவர் தன் பணியை மேற்கொள்வதால் சென்னை வாசிகள் காவலர் குமாருக்கு மிகப்பெரிய ரசிகர்களாகி விட்டனர்... அது மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவுவதிலும் குமாருக்கு இணை குமார் தான்... செய்யும் தொழிலைக் காதலித்து செய்தால், நிச்சயம் நமக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு காவலர் குமார் ஒரு மிகப்பெரிய சான்று...


Next Story

மேலும் செய்திகள்