3 வயது சிறுவனை நடுரோட்டில் பிச்சை எடுக்கவிட்ட அம்மா அரவணைத்து தாயாக மாறிய போலீசார்

x

புதுச்சேரியில் கோயில் வாசலில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை, அப்பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

புதுச்சேரி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஹரி, கலைவாணன் ஆகிய இருவரும் ரோந்து சென்றபோது, பச்சை வாழியம்மன் கோயில் அருகே 3 வயது சிறுவன், யாசகம் எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அவனிடம் விசாரித்தனர்.

அப்போது, அந்த சிறுவன், சாலைகளில் காகிதம் சேகரித்து விற்பனை செய்யும் ராணி என்பவரின் மகன் என்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு கணவர் இறந்துவிட்ட நிலையில், சிறுவனை ராணி சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுவனை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்த காவலர்கள், அவனை அரியாங்குப்பத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்