கஞ்சா புழக்கத்திற்கு பின்னணியில் செயல்பட்ட போலீஸ் எஸ்ஐ

x

கஞ்சா புழக்கத்தில் பின்னணியில் செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் கஞ்சா விற்ற சந்திராபாபு என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது கூட்டாளிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீண்ட காலமாக கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த‌து விசாரணையில் தெரிய வந்த‌து.

மேலும், ஈரோடு மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் காவல் உதவி ஆய்வாளர் பணியாற்றி வந்த மகேந்திரன் என்பவர்தான், இந்த கஞ்சா கும்பலுக்கு பின்னணியில் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக கோவையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளராக மகேந்திரன் இருந்த போது, மாமூல் வசூலித்து, கஞ்சாவை புழக்கத்தில் விட உடந்தையாக இருந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து, தற்போதும் உதவி ஆய்வாளராக இருக்கும் மகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்