அலட்சியம் காட்டிய போலீஸ்.. ஸ்டேஷன் முன் தீ குளித்து ஜெயிலர் பலி - திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, சொத்து தகராறில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சிறைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லால்குடி கிளைச் சிறையில் காவலராக பணியாற்றி வந்த செம்பரை கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்திருந்தார். ஆனால், போலீசார் உரிய விசாரணை நடத்தாததால் மனமுடைந்த ராஜா, லால்குடி காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்