எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய விரைந்த போலீஸ் - பரபரப்பான மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட வழக்கில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யாவிற்கு 30 நாட்கள் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல் நல குறைவை காரணம் காட்டி நிபந்தனை ஜாமினில் இருந்து தளர்வு அளிக்க வேண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் SG சூர்யாவின் மீது சிதம்பரம் தீட்சிதர்கள் வழக்கில் தவறான கருத்துக்களை பதிவிட்டதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய போலீசார் மதுரை விரைந்துள்ளனர். இந்த வழக்கிலும் முன்ஜாமின் அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com