வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலையான விவகாரம் - பெண்ணிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறை

வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலையான விவகாரம் - பெண்ணிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறை
Published on

கோவை சூலூர் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மனைவியான விஜி பழனிசாமி, காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற ரத்னா, கடந்த ஆண்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த தற்கொலை வீடியோ வைரலான நிலையில் தற்கொலைக்கு அவரது மனைவி விஜி பழனிச்சாமிதான் காரணம் என்று சிவாவின் பெற்றோர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர். எஸ்.பி., உத்தரவின் பேரில் சூலூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் விஜி பழனிச்சாமி, காவல்நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே சிவாவின் தாய் மற்றும் தங்கையை நேரில் அழைத்த சூலூர் போலீசார் இருதரப்பு விளக்கத்தையும் பதிவு செய்தனர். மேலும் ஆதாரங்கள் தேவை என்பதால் விசாரணை

தொடரும் எனவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com