வடமாநில தொழிலாளர்களுடன் உற்சாகமாக ஹோலி கொண்டாடிய காவல்துறை

x

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் காவல்துறையினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்கள் மத்தியில் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹோலி பண்டிகையை ஒட்டி, குமாரபாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியும் இடங்களுக்குச் சென்ற போலீசார் இனிப்பு வழங்கியும், வண்ணப் பொடிகளை பூசியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்று காவல் ஆய்வாளர் ரவி கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்