போலீசார் அடித்ததால் இளைஞர் விபரீத முடிவு - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

x

திருவாரூரில், விசாரணைக்கு வந்தபோது போலீசார் அடித்ததால், மனம் உடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ராகுல்ராஜ் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த ராகுல்ராஜை, போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராகுல்ராஜ், வீட்டுக்கு வந்த நிலையில், விஷம் குடித்துள்ளார்.

இதனை அறிந்த உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்