செல்போனில் கதறிய மாணவி.. பள்ளியில் அத்துமீறிய கொடூர ஆசிரியர் - உரையாடலை கேட்டு அதிர்ந்த பெற்றோர்- சேலத்தில் அதிர்ச்சி

x

சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி. செய்முறைத் தேர்வுக்காக பள்ளியில் உள்ள ஆய்வகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த விலங்கியல் ஆசிரியர் மணிகண்டன் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு திரும்பிய மாணவி தனது தோழிக்கு போன் செய்து நடந்ததை கூறி அழுத நிலையில், இதை போன் ரெக்கார்டு மூலமாக அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மணிகண்டனை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்