வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்... 3 பேரை கைது செய்த போலீசார்

விருகாம்பாக்கம் அருகே சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விடுதியை கண்காணித்து வந்த விருகம்பாக்கம் போலீசாரிடம், வெஸ்லி, மணிகண்டன் மற்றும் காட்சன் ஆகிய 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com