கஷாயத்தில் விஷம்.. காதலனை கொன்ற காதலி கிருமிநாசினி குடித்து தற்கொலை முயற்சி

x

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக கேரள எல்லையான பாறசாலையில் கல்லூரி மாணவன் சரோன் ராஜ் என்பவரை அவரின் காதலியான கிரிஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரி​ஷ்மாவை போலீசார் கைது செய்து நெடுமங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அங்கு கழிவறையில் வைத்திருந்த கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்