இரவு பகலாக காவல் காக்கும் விவசாயிகள்.. அசந்த நேரம் மாயமாகும் தக்காளி.. Pochampalli |Tomato |Thief

x

மேட்டுப்புலியூர் கிராமத்தில் இரவு நேரங்களில் தக்காளிப் பழங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் இரவு பகலாக தோட்டத்திற்குக் காவல் காத்து வருகின்றனர். பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தோட்டத்தில் காவலுக்கு இருக்கின்றனர். ஆனாலும், விவசாயிகள் ஏமாறும் சமயம் பார்த்து தக்காளிப் பழங்கள் களவாடப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை குளிர் காரணமாக வீட்டிற்குள் செல்லும்போது, தோட்டத்திற்குள் புகுந்து விடும் மர்ம நபர்கள் தக்காளிகளை பறித்து சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுவதுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்