தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக இருக்கிறது என உத்தவ் தாக்கரே காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

x
  • மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
  • தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது எனக் கூறிய உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டார்.
  • தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறது என அவரது தரப்பு குற்றம் சாட்டியது.
  • இந்த நிலையில் மும்பையில் தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கும் உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படுகிறது எனவும் இதுவரையில் செய்யாத ஒன்றை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது எனவும் விமர்சனம் செய்திருக்கிறார்.
  • மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்த தொண்டர்களை கேட்டுக்கொண்ட அவர், சின்னத்தையும், கட்சி பெயரையும் திருடியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என சூளுரைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்