மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் - நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..

x

மதுரையில் 7.3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தினை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களால் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்