உத்தராகண்ட் செல்கிறார் பிரதமர் மோடி.. - வெளியானது முழு பயண விவரம்

x

உத்தராகண்ட் செல்கிறார் பிரதமர் மோடி.. - வெளியானது முழு பயண விவரம்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

உத்தரகாண்ட் சென்றதும் முதலில் பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபட உள்ளார்.

பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பிறகு ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு பிரதமர் செல்கிறார்.

மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார். மனாவிலிருந்து கணவாய் வரை, ஜோஷிமத் முதல் மலாரி வரை சுமார் 1000 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்