"தாஜா செய்வதிலேயே மும்முரமாக முந்தைய அரசுகள்" - பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

x
  • பொதுமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற ஓய்வின்றி உழைத்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  • மத்திய பிரதேச மாநிலம், போபாலில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில்கள், நமது நாட்டின் திறமை மற்றும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
  • சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பிற்கு புதிய உத்வேகம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
  • நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்த அவர், நாட்டிலுள்ள இளைஞர்களிடம் இந்த ரயில் அதிக வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
  • மக்களை தாஜா செய்வதிலேயே முந்தைய அரசுகள் மும்முரமாக இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, பொதுமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற தங்களின் அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்