முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

x

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். வாக்கு வங்கி அரசியல் ஏழைகளை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார். முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் வாக்கு வங்கியை நோக்கமாக கொண்டவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், எதிர்கட்சிகள் கூட அதை எதிர்க்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டர். பொது சிவில் சட்டத்தின் பெயரால் மக்களை தூண்டி விட பணிகள் நடைபெற்று வருவதை பார்க்கிறோம் என்று கூறிய அவர், ஒரு வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி சட்டம் இருந்தால் அந்த குடும்பத்தை சரியாக நடத்த முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதேபோல நாட்டில் இரு வேறு முறைகள் இருந்தால் அந்த நாட்டை எப்படி சமூகமாக நடத்த முடியும்? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்