முன்னாள் ரவுடிக்கு வணக்கம் சொன்ன பிரதமர் மோடி.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு - தீயாய் பரவும் புகைப்படம்

x
  • கர்நாடக சுற்றுப் பயணத்தின்போது முன்னாள் ரவுடிக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்த படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடகாவை சேர்ந்த ஃபைட்டர் ரவி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் ரவுடிகள் பட்டியலில் இருந்தார்.
  • நன்னடத்தை காரணமாக ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவர், அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
  • மேலும், கடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலம் மண்டியாவுக்கு வந்த பிரதமர் மோடியை அவர் வரவேற்றபோது, அவர் வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் தெரிவித்தார்.
  • இந்நிலையில், இந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, கூப்பிய கைகளுடன் ரவுடிக்கு வணக்கம் செலுத்தி, பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்