"எங்களை எப்படியாவது காப்பாத்துங்க..." - சூடானில் உள்ள இந்தியர்கள் கோரிக்கை சூடானில் கதறும் இந்தியர்..!

x

சூடானில் உக்கிரமடைந்து வரும் போர் வீடுகளை காலி செய்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்..போர் உக்கிரமடைந்து வருவதால், சூடானில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவமும், துணை ராணுவமும் கடும் சண்டையிட்டு வரும் நிலையில், அங்கு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கார்டூம் நகரில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டுவிட்டு அருகே உள்ள மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். சிலர் நடந்தும், சிலர் வாகனங்களிலும் பாதுகாப்பு கருதி குடும்பத்தோடு கிளம்பினர். சாலையில் நடந்து செல்வது கூட அச்சமாக இருப்பதாக தெரிவிக்கும் சூடான் மக்கள், ஆபத்தான நிலையில், குடிபெயர்ந்து வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்