தரிசு நிலத்தில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் - விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தரிசு நிலம் மற்றும் ஏரியோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரிசு நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால், புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்