ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

x

பிரிட்டனிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

வேல்சிலும் ஸ்காட்லாந்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்திலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் மட்டும், ஆண்டுக்கு11 லட்சம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகளும்... 40 லட்சத் துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கரண்டி வகைகளும் பயன்படுத் தப்படுகின்றன.

இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்ட்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலாளர் தெரசா கஃபே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்