திடீரென குடியிருப்பு கட்டடத்தில் மோதிய விமானம் - சம்பவ இடத்திலேயே 2 விமானிகள் பலி

x

திடீரென குடியிருப்பு கட்டடத்தில் மோதிய விமானம் - சம்பவ இடத்திலேயே 2 விமானிகள் பலி

ரஷ்யாவில் போர் விமானம் குடியிருப்புக் கட்டடத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

இர்குட்ஸ்க் மாகாணத்தின் சைபீரியா நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஸ் யு போர் விமானம் திடீரென குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு, அசோவ் நகரில் இதே போல் போர் விமானம் விபத்திற்குள்ளானதில் 15 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்