மழை நீர் வடிகால் சரி செய்யும் இடத்தில் குழி - குழியில் சிக்கிய பெண் - உடனடியாக மீட்பு

x

மழை நீர் வடிகால் சரி செய்யும் இடத்தில் குழி - குழியில் சிக்கிய பெண் - உடனடியாக மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில், மழை நீர் வடிகால்வாய் சரி செய்யும் இடத்தில் இருந்த குழியில் பெண் ஒருவர் சிக்கிய நிலையில், அருகில் இருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டனர். திருப்போரூர் பேரூராட்சி, ஓஎம்ஆர் சாலை டாஸ்மாக் கடை எதிரே மழை நீர் வடிகால்வாயை சரி செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்காள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்து சிக்கி கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றிய நிலையில், அங்கு உடனடியாக தடுப்புகள் வைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்