மாட்டு வண்டியில் போட்டோஷூட்! - இணையத்தை கலக்கும் புதுமண தம்பதி

x

சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து மாட்டு வண்டியில் போட்டோ சூட் நடத்திய தம்பதி இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோலை சக்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மணமக்களின் வீட்டார் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தி மாட்டு வண்டியில் போட்டோ சூட் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்