காணாமல் போன இருவர் - செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீஸ் - இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

x

அருப்புக்கோட்டை அருகே 2 பேர் மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டையை அடுத்த உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை என்பவரும், குலசேகர நல்லூரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் காணவில்லை என்று, அவர்களின் குடும்பத்தினர், திருச்சுழி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

சபரிமலையின் செல்போன் சிக்னலை வைத்து, அவர் காந்தி நகர் நான்கு வழிச்சாலை அருகே உள்ள முனியாண்டி கோவில் பாதை அருகே இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, சபரிமலை வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதே பகுதியில், ரத்தினவேல் பாண்டியனும் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.

இருவரின் உடலையும், போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் வேறு யாரிடமும் முன்விரோதம் இருந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்