200 நாட்களாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை | petrol

x

பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 200 நாட்கள் ஆகியுள்ளது. உக்ரைன் போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு122 டாலராக அதிகரித்தால், பெட்ரோல், டீசல் விலைகள் வெகுவாக அதிகரித்தன. ஜூனில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகள், லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்ட பின், பெட்ரோல் விலை லிட்டருக்கு 102 ரூபாய் 63 பைசாவாக குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 24 பைசாவாக குறைந்தது. கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் எதுவுமில்லாமல் சீராக தொடர்கிறது. இன்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 79.67 டாலராக வெகுவாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்